"தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ஆர்.பி.ஐ ஊழியர்கள் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்" சீறும் நாராயணன் திருப்பதி

Update: 2022-01-27 11:45 GMT

தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது யாராக இருந்தாலும் எழுந்திருக்க வேண்டியது கட்டாயம் என பா.ஜ.க'வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73'வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி கிளையில் குடியரசு தினம் கொண்டாடப்படும் பொழுது விழாவின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் இசைக்கப்பட்டது அப்பொழுது அங்கிருந்த சிலர் எழுந்து நிற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாகவும் அதற்கு 'நீதிமன்றமே தேவை இல்லை' எனக் கூறியிருக்கிறது எனவம் ரிசர்வ் வங்கி ஊழியர் ஒருவர் கூறியதாகவும் கூறப்படுகிறது, இந்த விவகாரம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க'வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறும்போது, "ரிசர்வ் வங்கியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கத் தேவையில்லை என்ற சிலரின் வாதம் கண்டிக்கத்தக்கது, எனவே இது குறித்த 'சர்ச்சையில் எழுந்து நிற்க வேண்டும்' என அரசு நிர்வாக உத்தரவு ஏதும் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் கடந்த மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டியது கட்டாயம். தேவையில்லாத வாதங்களை முன்வைத்து நம் தாய்க்கு ஒப்பான தமிழ்மொழியின் மரியாதையை குறைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம். தேவையில்லாத வாதம் புரிந்தவர்கள் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு நின்ற நிலையில் மனதார தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


Source - Asianet NEWS

Similar News