சீர் கெடுகிறதா தமிழக சட்டம் ஒழுங்கு? வீட்டின் அருகிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட தி.மு.க நிர்வாகி!
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் தலைவிரித்தாடும் நிலையில் பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகில் தி.மு.க வார்டு செயலாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாநகரத்தில் தி.மு.க வார்டு செயலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
திருநெல்வேலியில் தி.மு.க வார்டு செயலாளராக இருப்பவர் பொண்ணு தாஸ் என்கின்ற அபே மணி. நேற்று இரவு 11 மணியளவில் பாளையங்கோட்டையில் அவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பொழுது மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பின்னர் பிரேதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் விசாரித்து வரும் நிலையில் தி.மு.க'வை சேர்ந்த ஒருவரே முன்விரோதம் காரணமாக அவர் வீட்டின் அருகிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நிற்பதற்கு இதுவே ஒரு சாட்சியாகும்.