தடயங்கள் சேகரிப்பதற்கு முன்னரே குண்டு வெடித்த இடத்தை போலீசார் சுத்தம் செய்வது எதற்கு? அண்ணாமலை கேள்வி!

Update: 2022-02-10 14:17 GMT

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் அலுவலகத்தின் சுவர் மற்றும் தரை கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:

பாஜக அலுவலகம் மீதான குண்டு வீச்சு நடைபெற்ற இடத்தை உடனடியாக போலீசார் எதற்காக சுத்தம் செய்ய வேண்டும். எப்.ஐ.ஆர்.பதிவு செய்வதற்குள் என்ன அவசரம் இருக்கு. மேலும் இது பற்றிய விசாரணையை போலீசார் விசாரிப்பதற்கு பதில் தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Twiter

Similar News