மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட மதுரை உயர் நீதிமன்றம்!

Update: 2022-02-10 13:45 GMT

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க'வை களங்கப் படுத்தியதாக தூத்துக்குடி தி.மு.க மாவட்ட மாணவர் பிரிவைச் சேர்ந்த உமர் சங்கர் என்பவர் தூத்துக்குடி கோர்ட்டில் மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்தார், இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என யூடியூப் மாரிதாஸ் தரப்பிலிருந்து மதுரை ஐகோர்ட்டில் மனுதக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். ஆளும் தி.மு.க'வை விமர்சிப்பவர்கள் மீது தி.மு.க அரசு வழக்கு தொடர்வது வாடிக்கையாகி வருகிறது.

Source - daily thanthi

Similar News