பா.ஜ.க.வை தவறாக சித்தரிக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நோக்கம்: வேலூர் இப்ராஹிம் பரபரப்பு குற்றச்சாட்டு!
பாஜகவை முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான ஒரு கட்சியாக சித்தரிக்கும் வேலையில் ஈடுபடுவதுதான் திமுவின் நோக்கம் என்று பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம், போத்தனூரில் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு பேசுகையில்; நான் அனைத்து மதம் மற்றும் வழிபாட்டு தலங்களை மதிப்பவனர். பாஜகவில் தேசிய பொறுப்பில் உள்ளேன். சிறுபான்மை மக்கள் தன்மீது மிகுந்து பாசம் வைத்துள்ளனர். இதனால் எங்கு சென்றாலும் அன்பாக வரவேற்கின்றனர். ஆனால் திமுக அரசு காவல்துறையை வைத்து என்னை பிரசாரம் மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தி கைது செய்கிறது.
மேலும், மதத்தின் பெயரை பயன்படுத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை மட்டுமே விமர்சனம் செய்கிறேன். பாஜகவை முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான கட்சியாக சித்தரிக்க வேண்டும் என்பது மட்டுமே திமுகவின் நோக்கமாக உள்ளது. இங்கு அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாழக்கூடாது என்று சில அரசியல் சக்திகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகத்தான் திமுக தன்னை கைது செய்ய முனைப்பு காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar