ஹிஜாப் அகற்ற பா.ஜ.க. முகவர் சொல்லியதில் தவறில்லை!

Update: 2022-02-21 12:07 GMT

மதுரை மாவட்டம், மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணின் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் அகற்ற கூறியதில் தவறு ஒன்றும் இல்லை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது: பாஜக முகவர் ஹிஜாப்பை அகற்றுமாறு கூறியதில் எந்த தவறும் இல்லை என்றார். ஹிஜாப் எதிர்ப்பது எங்களின் நோக்கம் இல்லை. சாதாரண பெண்களை போன்று அனைவரும் வரவேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. இதில் எந்த ஒரு தவறும் இல்லை. தேர்தல் ஆணையம் ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் அதனை ஏற்றுக்கொளளுமா? நாளை வாக்கு எண்ணும்போது முகத்திரை அணிந்து சென்றால் அதனை ஏற்றுக்கொள்வார்களா?

மேலும், விமான நிலையம் செல்பவர்கள் முகத்திரையை கழட்டி முகத்தைக் காட்டுங்கள் என்று கூறுகிறார்கள். அது சரியா அல்லது தவறா சொல்லுங்கள், எனவே முகவர் தனது கடமையைதான் செய்துள்ளார். யாராக இருந்தாலம் அது சரியாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source,Image Courtesy: Dinakaran


Tags:    

Similar News