நிதியமைச்சர் வாசித்த பட்ஜெட்: இத்தனை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தூங்கி வழிந்தார்களா?
திமுக அரசு பொறுப்பெற்ற பின்னர் இரண்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன்படி நேற்று (மார்ச் 18) காலை தமிழக சட்டசபையில் பொதுபட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரட்டை விட்டு தூங்கி வழிந்த புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகிறது. ஆளும் கட்சியான திமுக தாக்கல் செய்யும் பட்ஜெட் பிடிக்காமல் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சில அமைச்சர்கள் தூங்கி வழிந்தனரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக வைரலாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Facebook