"அகில இந்திய அளவில் பா.ஜ.க தன் பலத்தை கூட்டிக்கொண்டிருக்கிறது" அடித்துக்கூறும் ஜி.கே வாசன்!
"அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி தன் பலத்தை இழந்து கொண்டிருக்கிறது" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார்.
தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி, காங்கிரஸின் இருப்பு குறைந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் அதற்கு தக்க சான்றாக அமைந்து விட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியில் உள்ளேயும் வெளியேயும் பல புகைச்சல்கள் பரவத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், தனியார் ஊடக நிறுவனத்திற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் பேட்டியளித்தார்.
அப்பேட்டியில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து வாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் " காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆராய நான் விரும்பவில்லை. என்னுடைய பார்வை தமிழக அரசியலில் மேல்தான் உள்ளது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தையும், பா.ஜ.க தேசிய அளவில் பலம் பெறுவதையும் சுட்டிக்காட்டுகிறது. மக்களின் செல்வாக்கை இழந்ததால், காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது"
என்று காங்கிரஸ் கட்சி பற்றிய கேள்விக்கு வாசன் பதில் கூறினார்.