"பெண் அதிகாரியை மிரட்டும் தி.மு.க கூட்டணி கட்சி! உறக்கத்தை கலைக்கவும் முதல்வரே - எஸ்.ஜி.சூர்யா காட்டம்!

Update: 2022-05-19 07:31 GMT
"பெண் அதிகாரியை மிரட்டும் தி.மு.க கூட்டணி கட்சி! உறக்கத்தை கலைக்கவும் முதல்வரே - எஸ்.ஜி.சூர்யா காட்டம்!

விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் நுழைந்து, தகாத வார்த்தைகளால் தன்னைப் பேசி மிரட்டியதாக அரசியல் கட்சி பிரமுகர் மீது பெண் அதிகாரி ஒருவர் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.

தாட்கோ அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் அன்புதேவகுமாரி. இவரை நேற்று அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேரந்து மனு ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் பெண் அதிகாரி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த அரசியல் கட்சி பிரமுகர், பெண் அதிகாரியை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளினால் திட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது.

இந்நிலையில், இது குறித்து தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை தொடர்ந்து படுகொலைகள், சொந்த தி.மு.க.வினருக்கும் பாதுகாப்பில்லை, தொடர்ந்து அரசியல் கொலைகள். அரசு அதிகாரிகளுக்கு கூட பாதுகாப்பில்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். உறக்கத்தை கலைக்கவும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News