"இந்து மதத்தை எதிர்ப்பே திராவிடம்" - புது ரூட்டை பிடிக்கும் திருமாவளவன்
திராவிட அடையாளம் என்பது இந்து மத எதிர்ப்புதான் புத்தகம் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரபரப்பாக கூறியுள்ள சம்பவம் இந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்த பின்னர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. இதற்கு பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தி.மு.க. ஆட்சி என்பதால் சிலர் வேண்டும் என்றே இந்து கடவுள்களை இழிவாக பேசி யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
"திராவிட அடையாளம் என்பது இந்து மத எதிர்ப்பு" - திருமாவளவன் பரபரப்பு பேச்சு | Thirumavalavan
— Chanakyaa Tv (@ChanakyaaTv) May 29, 2022
Watch Here -->> https://t.co/krZlTk9pB4 pic.twitter.com/sNsZg8d8aj
தொடர்ந்து இந்துக்களை இழிவுப்படுத்தி வரும் நேரத்தில் தற்போது விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தற்போது புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, திராவிட அடையாளம் என்றாலே இந்து மத எதிர்ப்பு மட்டும்தான் என்று பேசினார். இவரது பேச்சு மேலும், இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தகம் வெளியீட்டு விழாவில் இந்துக்களை அவமதிக்கின்ற நோக்கத்தில் இவர் பேசியிருக்க வேண்டிய நோக்கம் என்ன என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இவரது பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Source, Image Courtesy: Twitter