மாநகராட்சி கூட்டத்தில் ஆர்வமாக வீடியோ கேம் விளையாடிய தி.மு.க கவுன்சிலர்! உள்ளாட்சியில் நல்லாட்சி!

Update: 2022-08-01 00:54 GMT

சென்னை: மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தி.மு.க பெண் கவுன்சிலர் ஒருவர் செல்போனில் வீடியோ கேம் விளையாடிய சம்பவம் பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது.


தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தி.மு.க'வின் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் செயல்கள், பொது மக்களிடம் அதிருப்தியை பெற்று வருகிறது. இதனால் தி.மு.க தலைமை வருத்தத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் இன்று(31.08.2022) சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற 188'வது வார்டு தி.மு.க கவுன்சிலர் 'சமீனா செல்வம்',கூட்டத்தில் நடைபெற்றுவரும் உரைகள் மற்றும் விவாதங்களை கவனிக்காமல், தனது செல்போனில் மும்முரமாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


"தனது வார்டு பிரச்சனைகள் குறித்து, மாமன்றத்தில்  கோரிக்கைகள் எழுப்பி நிவாரணம் பெற வேண்டிய கவுன்சிலர், இப்படி சிறுபிள்ளைத்தனமாக வீடியோ கேம் விளையாடலாமா? இப்படிப்பட்ட வார்டு கவுன்சிலரை ஏன் தேர்ந்தெடுத்தோம்? என்று வாக்களித்த பொதுமக்கள் வேதனை அடைவார்கள்" என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.

News J

Tags:    

Similar News