அமைச்சர் மாதிரி பேசுங்கள், 'துண்டு போட்ட எல்லாரும் விவசாயி கிடையாது' என எப்படி கூறலாம் - எ.வ.வேலு'வை எதிர்த்து கேட்கும் அண்ணாமலை

Update: 2022-08-31 02:53 GMT

துண்டு போட்ட எல்லோரும் விவசாயிகள் என எடுத்துக் கொள்ள முடியாது என அமைச்சர் எ.வ.வேலு பேசியது விவசாயிகளை அவமதிக்கும் செயல் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 'பா.ஜ.க அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசை சார்ந்தது எனவும் தமிழ்நாட்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு வழித்தடம் திட்டத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க எதிர்கட்சியாக இருந்தபோது சென்னை எட்டு வழித்தடம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது வாழ்வாரத்தை இது பாதிக்கிறது என கூறி விவசாயங்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியது. தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஆளுங்கட்ச்சியாக வந்த பிறகு தி.மு.க தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டு விட்டது இது தேர்தலில் தெரிவித்த பல உறுதிமொழியை கண்டுகொள்ளாமல் விட்டது போல் இதனையும் வசதியாக மறந்துவிட்டது.

அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் துண்டு போட்ட எல்லாரும் விவசாயிகள் என எடுத்துக் கொள்ள முடியாது என கூறி இருக்கிறார். ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் எப்படி பேசுவது விவசாயிகளை அவமதிக்கும் செயல் தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதற்கான காரணத்தை மக்களிடம் விளங்க வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.


Source - News 7 Tamil

Similar News