கொள்கைகளை மாற்றினால் பாஜகவுடன் கைகோர்ப்பதில் விசிக தயங்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடைபெற்ற 25வது கிறிஸ்துமஸ் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டார். கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.
ஆர்எஸ்எஸ்ஸின் சங்பரிவார் அமைப்புகளில் ஒன்று தான் பாஜக. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் ஆதாயத்திற்காக கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்துக்களை அணிதிரட்டும் முயற்சி நடக்கிறது. கொள்கைகளை மாற்றினால் விசிக கட்சி பாஜகவுடன் சங்பரிவார் அமைப்புகளோடும் கைகோர்பதில் ஒருபோதும் தயங்காது என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன், விஜய்வசந்த் எம்பி, ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சைமுத்து, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.