தூத்துக்குடியில் சொடக்கு போட்டு அண்ணாமலை செய்த சம்பவம் - பதுங்கிய அமைச்சர் கீதா ஜீவன்!

Update: 2023-03-25 13:39 GMT

அண்ணாமலையை பார்த்து சவால் விட்ட திமுக அமைச்சர் நேற்று அண்ணாமலையை பார்த்து பதுங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஒரு வருடமாகவே திமுக அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையிலான கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன. அண்ணாமலை திமுக அமைசர்களின் ஊழல்களை வெளியில் கொண்டு வருவேன் என கூறியதும் அதிக திமுக அமைச்சர்கள் அண்ணாமலையை விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.


இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், 'பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு நல்ல கற்பனை வளம் உள்ளது. கதை எழுதலாம், இலக்கியவாதியாக மாறலாம்,முதல்வர் மு.க.ஸ்டாலின் ரெயிலில் வந்ததை வைத்து ஒரு கதை எழுதுகிறார்.பிரதமர் மோடி தனி விமானத்தில் வருவது தவறு இல்லையாம், ஆனால் எங்கள் தலைவர் ரெயிலில் வந்ததை தவறு என்கிறார். அண்ணமாலை அரசியலுக்கு வந்து ஒருவருடம் தான் ஆகிறது. நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் என சுயபுராணம் பாடி வருகிறார். நீ எப்படியும் இருந்துவிட்டுபோவே ஐபிஎஸ் வேலையை செய்ய முடியவில்லை என்று தான் இங்கு ஓடிவந்துள்ளார் நான் அரசியலுக்கு வந்து 26 வருடமாகி விட்டது. ஒரே கொள்கை பிடிப்போடு இருக்கிறேன்.எதிலும் நாங்க துணிந்து நிற்போம், நான் தெற்கத்தி பொண்ணு என்றும், முதல்வர், அமைச்சர்களை பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் மேடைக்கு நாங்கள் ஏறுவோம். சூடு, சொரணை இருந்தால் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என அண்ணாமலையை மரியாதை இல்லாமல் கடுமையாக விமர்சித்தார்.


இதனை தமிழக பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன, அதனை தொடர்ந்து தமிழக பாஜகவை சேர்ந்த சிலர் வேறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இந்த கைது சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் வரவுள்ளதால், முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தமிழக பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. தயாசங்கர் , மானூர் ஒன்றியத் தலைவர் திரு.சுப்புத்துரை ஆகியோரை இன்று அதிகாலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா?' என கடுமையாகவே விமர்சித்தார். இப்படி அண்ணாமலை மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் பனிப்போர் கடுமையாக இருந்துவந்தது.

இந்த சூழலில் டெல்லி சென்று வந்த அண்ணாமலை மதுரையில் இறங்கி தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டார். தூத்துக்குடியில் நடைபெற்ற பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அமைச்சர் கீதா ஜீவனை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், 'தூத்துக்குடியைச் சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவன், அழுகிய முட்டை வாங்கி ஊழல் செய்துவருகிறார். `அண்ணாமலை வந்தால் அவரை ஒருகை பார்த்துவிடுவோம்' என்று கூறினார்கள் தி.மு.க-வினர். இப்போது நான் வந்திருக்கிறேன். ஏதாவது செய்யுங்கள் பார்ப்போம்... அப்பா பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் அமைச்சர் கீதா ஜீவனுக்கே இவ்வளவு இருந்தால், பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் சுயமாக இருக்கக்கூடியவர்கள். தனியாகப் போராடி ஜெயிக்கக்கூடியவர்கள். எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?' என ஆவேசமாக பேசினார்.


இப்படி அண்ணாமலை சவால் விட்டு பேசியதற்கு அமைச்சர் கீதா ஜீவனோ அல்லது அமைச்சர் கீதா ஜீவன் தரப்போ இந்த நிமிடம் வரை எதுவும் பதில் கூறவில்லை. திமுக அமைச்சர்கள் எல்லாம் எப்படித்தான் வெறும் பேச்சு மட்டும் தான் என அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஏப்ரல் 14ஆம் தேதி முதல் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடாத போகிறோம் என அண்ணாமலை கூறியதே திமுக அமைச்சர்கள் பதுங்கியதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Similar News