திமுக அரசு கலைய போகிறது என அதிரடி தகவல் வெளிவந்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை கையில் கட்டி இருந்த ரப்பேல் வாட்சை பற்றி விமர்சித்து அதன் ரசீதை காட்டுமாறு கேட்டார் அதற்கு பிறகு அண்ணாமலை எனது ரஃபீல் வாட்சுடன் திமுக கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவதாக அறிவித்தார், அதன்படியே ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவின் சொத்து பட்டியலையும் விரைவில் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அறிவித்தார். அதன்படி ஜெயகத்ரட்சகன் எ.வே வேலு, கே என் நேரு, கனிமொழி, கலாநிதி மாறன், டி ஆர் பாலு கதிர் ஆனந்த், கலாநிதி வீரசாமி, அன்பில் மகேஷ் மற்றும் முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சொத்து விவரங்களை வெளியிட்டார் அண்ணாமலை. ஸ்டீல் நிறுவனத்திடம் இவர்களுக்கு இருக்கும் தொடர்பையும் வெளிப்படுத்தினார்.
இதற்கு திமுகவினர் எந்த ஒரு விளக்கத்தை கொடுக்கவில்லை என்றாலும் ஆர் எஸ் பாரதி, முதலமைச்சரையும் மற்ற முக்கிய தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயர்களை களங்கப்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகிறீர்கள் பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை தான் பேசிய அனைத்து பேச்சுகளுக்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் இழப்பீடு தொகையாக ரூபாய் 500 கோடி தர வேண்டும் இதனை 48 மணி நேரத்திற்குள் செய்ய தவறினால் உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று கூறினார்.
ஆர் எஸ் பாரதி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யார் என்ன கூறினாலும் சட்டத்தை கூறி மிரட்டினாலும் அதற்கு பயப்பட மாட்டேன் என்று திமுகவினரின் சொத்து பட்டியல் தொடர்பாக வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிபிஐ மற்றும் அமலாக்க துறையிடம் நேரடியாக புகார் அளிக்க இருக்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், சிபிஐயின் அப்பாயின்மெண்டுக்காக மட்டுமே காத்திருக்கிறேன் கிடைத்ததும் அனைத்து கோப்புகளின் கொண்டு போய் ஒப்படைத்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். ஊழல்களை வெளிப்படையாக எடுத்துக் கூறினால் மட்டுமே பாஜக மீது நம்பிக்கை ஏற்படும் என்றும் அதனால் அனைத்து ஊழல் பற்றிய விவரங்களையும் சிபிஐ மற்றும் அமலாக்க துறையிடம் ஒப்படைத்து தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் தனது நிலையை நிறுத்தியுள்ளார்.