உதயநிதியின் ஆணவ பேச்சிற்கு ஒரே நாளில் ஆப்பு வைத்த அண்ணாமலை

Update: 2023-04-21 13:39 GMT

திமிராக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு விழப்போகுது ஆப்பு என தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கட்சியை சேர்ந்த டாப் தலைவர்களின் சொத்து பட்டியல்களை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார். அவர் வெளியிட்ட பிறகு சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரபரப்பாக பரவியது ஆனால் இந்த சொத்து பட்டியல்களின் சொந்தக்காரர்கள் ஒருவருமே இது தங்களது சொத்து அல்ல என்று யாரும் மறுக்கவும் இல்லை அதைப் பற்றி எதுவும் பேசவும் இல்லை. கிட்டத்தட்ட சொத்து பட்டியல்கள் வெளியிட்டு 48 மணி நேரம் கழித்து திமுகவின் அமைப்பு செயலாளரான ஆர் எஸ் பாரதி, அண்ணாமலை, தான் வெளியிட்ட சொத்து பட்டியல் பற்றிய வீடியோக்களை முற்றிலுமாக நீக்க வேண்டும் அதோடு தான் கூறியது தவறு என்று அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் தங்களுக்கு 500 கோடி ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் இல்லை என்றால் சிவில் மற்றும் கிருமினல் வழக்குகள் அண்ணாமலை மீது தொடரப்படும் என்று அறிவித்திருந்தார்.

சொத்து பட்டியல் பற்றிய முழு விவரங்களும் ஆதாரமாக என்னிடம் உள்ளது நான் நேரடியாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிலும் ஒப்படைத்து தங்கள் மீது வழக்கு பதிவு செய்து கொள்கிறேன் என்று அண்ணாமலை நேரடியாக தனது பதிலை வெளியிட்டார். இதற்காக அண்ணாமலை மீது ஆருத்ரா நிறுவனத்தின் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது திமுக இதற்கு இழப்பீடாக 501 கோடி நீங்கள் எனக்கு தர வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இப்படி ஆர் எஸ் பாரதி மற்றும் அண்ணாமலை இருவருமே பேசிக் கொண்டிருந்த சமயத்தில் கிட்டத்தட்ட இந்த விவகாரம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு உதயநிதி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது, அவரிடம் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் பற்றிய விவரங்களுக்கு கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு எதற்காக என்னிடம் மட்டும் இவ்வளவு கேள்விகள் கேட்கிறீர்கள் நீங்கள் அண்ணாமலை சந்தித்தால் ஸ்கூல் டீச்சர் சொன்னதை ஸ்டுடென்ட் கேட்டுக்கொண்டு வர மாதிரியே நீங்களும் அண்ணாமலை சொல்லும் போது அவர் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு வருகிறீர்கள், ஆதாரம் அற்ற விவரங்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளார் நானும் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன் திமுக மீது அண்ணாமலை வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு நாங்கள் சும்மா விடுவதாக இல்லை என்று பதிலளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

இப்படி அண்ணாமலை மீது தான் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று அமைச்சரு உதயநிதி ஸ்டாலின் கூறிய அடுத்த நாளே நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மருமகன் இருவரும் 30 ஆயிரம் கோடி ருபாய் சேர்த்து வைத்துள்ளனர் என கூறிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது, அந்த ஆடியோ பதிவில் அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வரின் மருமகனான சபரீசன் ஆகிய இருவருமே ஒரு வருடத்திற்கு அவர்களின் மூதாதையர்களை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். அது தற்பொழுது பிரச்சினையாகி வருகிறது, இதை எப்படி கையாளுவது? எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருப்பது? முதலில் பத்து கோடி 20 கோடி என சிறுக சிறுக குவித்த நிலையில் தற்போது அது ஒரு 30,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவகாரத்திற்கு திமிராக பதிலளித்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக கட்சியின் அமைச்சரே தற்போது ஆபத்தாக மாறி உள்ளார், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வைத்த ஆப்பு உதயநிதிக்கு தற்பொழுது பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

Similar News