அண்ணாமலைக்கு தகவல் தரும் கருப்பு ஆடு யார்? - திணறும் அறிவாலயம்!

Update: 2023-05-15 02:35 GMT

அண்ணாமலைக்கு போகும் தகவல், அலறடித்து அதிகாரிகளை மாற்றும் திமுக!

திமுக அரசு அமைந்ததிலிருந்து அதிகாரிகள் மாற்றப்படாமல் இருந்து வந்தன. ஆனால் சமீப காலமாக அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தெரிந்து வருவதால், அண்ணாமலைக்கு திமுகவின் பல விஷயங்களை தெரிந்து, அதை மக்கள் மன்றத்திலும் எடுத்து வைத்து வருகிறார். மேலும் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். எனவே இதன் காரணமாக திமுக அதிகாரிகளை மாற்றுவதால் அண்ணாமலைக்கு தகவல் பரவாமல் இருக்கும் என திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு செயலாளர் பதவிக்கு உதயச்சந்திரன் நியமிக்கப்படுகிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி கொண்டுள்ளது.

உதயச்சந்திரன் மாற்றம் குறித்து ஏற்கனவே சில தகவல்கள் கசிந்த நிலையில் தமிழக அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் செயலாளர்கள் இருப்பார்கள், அந்த வகையில் முதல்வரின் கீழ் உள்ள தனிச் செயலாளர்களுக்கு அந்த துறைகளை பிரித்துக் கொடுப்பது மரபாக இருந்து வருகிறது. மேலும் மற்ற தனிச் செயலாளர்களிடம் சில துறைகளில் இருப்பினும் அனைத்து துறைகளின் செயலாளர்களுல் முதல்வரை நேரடியாக சந்திக்கும் சூழல் உதயசந்திரனுக்கு உண்டு, அதிலும் அடிக்கடி சந்தித்து முதல்வரிடம் ஆலோசிப்பதால் இது பலரது கண்களையும் உறுத்தியதாக சர்ச்சைகள் வந்தன. ஸ்டாலின் என்ன அறிவித்தாலும் அதுக்கெல்லாம் உதயசந்திரன் தான் என்ற பொறுமலும் வந்த படியே இருக்கின்றன.

இப்படி உதயச்சந்திரனின் பதவி மாற்றம் நடக்க போகும் சூழலில், அவரது இடத்திற்கு யார் வருவது என்பது பற்றிய ஆலோசனையும் விறுவிறுப்பாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது, அந்த வகையில் முதல்வரின் முதன்மை தனிச் செயலாளர் இடத்திற்கு அமுதா பெயர் அடிபட்ட நிலையில், நேற்றைய தினம் ராஜேஷ் லக்காணி பெயர் அடிபட்டது.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதுமே ஸ்மார்ட் மற்றும் ஆக்டிவாக செயல்படும் அதிகாரிகள் லிஸ்ட்டை கையில் எடுத்தார். அதில் இடம்பெற்று இருந்தவர் தான் ராஜேஷ் லெக்கானி ஐஏஎஸ், இவர் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த அதிகாரிகளின் மாற்றத்தை பெரிய அளவில் முதல்வர் செய்யப் போவதாக விமர்சனங்கள் வருகின்றன. அந்த வகையில் ராஜேஷ் லகானியை தலைமை செயலகத்தில் முக்கிய பொறுப்புக்கு அழைத்துக் கொள்ள திட்டம் இருப்பதாகவும், செய்திகள் வெளியாகி நிலையில், அது குறித்து அறிவிப்பு எதுவும் வராமல் இருந்தது. இப்போது மீண்டும் ராஜேஷ் லக்கானி பெயர் அடிப்பட துவங்கிய நிலையில் அடுத்த பெயராக முருகானந்தம் பெயர் வருகிறது. இப்போதைக்கு இந்த லிஸ்டில் டாப் லெவலில் உள்ளது முருகானந்தம் தான் என்கிறார்கள். முருகானந்தம் தற்போது வைக்கும் நிதித்துறை செயலாளர் பதவி தான் உதய சந்திரனுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக சட்டசபையில் இப்போதுதான் அமைச்சர்களின் மாற்றம் நடைபெற்று இருக்கும் நிலையில் மிக விரைவில் அதிகாரிகளின் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது. இனி அண்ணாமலைக்கு எந்த தகவல்களும் செல்லாது என திமுக அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வைப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாது விரைவில் இன்னமும் சில அதிகாரிகள் மாற்றப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன!

Similar News