அசுர பலத்துடன் வருகிறது புது வார் ரூம்...! தெறிக்கப்போகும் எதிர்க்கட்சிகள்..!
அசுர பலத்துடன் வருகிறது புது வார் ரூம்!
2024 தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி இரண்டுமே கடுமையாக உழைத்து வருகிறது.இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் ஒருங்கிணைந்து இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ள நிலையில் மூன்றாவது கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக களத்தில் சந்திக்க உள்ளனர் இது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிணியின் இந்தியா கூட்டணி தேர்தல் பிரச்சாரங்கள் தொகுதி பங்கீடுகள் மற்றும் வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் என்னதான் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பாஜகவை கடுமையாக விமர்சனங்களை கூறிய எதிர்த்தாலும் இந்திய கூட்டணியில் வரிசையாக ஒவ்வொரு விக்கெட்டாக காலியாகி வருவது கூட்டணிக்கு தற்பொழுது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்
ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்து வரும் நிலையில் மறுபக்கம் பாஜகவின் என் டி ஏ கூட்டணி மாஸ் காட்டி வருகிறது அதாவது பாஜக கையில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தழுவ வேண்டும் என்பதற்காக பாஜக, அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் முதலிய கட்சிகளை வைத்து தேர்தலில் பிரதானமாக போட்டியிட உள்ளது இந்நிலையில் டெல்லியில் தேசிய தலைவர் ஜே பி நட்டா தலைமையில் என் டி ஏ கூட்டணி கட்சி செய்தி தொடர்பாளர்களின் பயிற்சி பட்டறை கூட்டம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி நாடாளுமன்ற துணை கட்டிடத்தில் நடைபெற்றது.
மேலும் இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர்கள் ஆன ஜே பி நட்டா ரவிசங்கர் பிரசாத் மற்றும் மத்திய அமைச்சர்களான ஸ்மிருதி ராணி பியூஸ் கோயல் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களான ஜிகே வாசன் ஆகியோர் கலந்துகொண்டு செய்தி தொடர்பாளர்களுக்கு பயிற்சி அளித்தனர் . தமிழக கூட்டணியில் இருந்து அதிமுகவின் வைகைச் செல்வன் மற்றும் புதிய நீதி கட்சியில் இருந்து ஜெகதீசன் மற்றும் பிற தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பதற்கு வியூகங்கள் வகுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.