யாரு கண்டா திமுக அமைச்சரவை கூட மாறலாம்...! இரண்டாம் கட்ட யாத்திரை குறித்து கசிந்த தகவல்கள்...!

Update: 2023-09-04 13:00 GMT

முதல் கட்டத்தை விட இரண்டாவது கட்டயாத்திரையில் தெறிக்க விட ஆர்வமுடன் காத்திருக்கும் பாஜக...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாதயாத்திரையை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து வெற்றிகரமாக தொடங்கினார் மேலும் முதல் கட்ட பாதயாத்திரை தொடங்கிய நாளிலிருந்து முடியும் வரை மக்களின் வரவேற்பும் ஆதரவும் பல மடங்கு பாஜாகவிற்கு தமிழகத்தில் கூடியுள்ளது என்பதை அண்ணாமலையின் பாதை யாத்திரை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதை யாத்திரை பயணம் முழுவதும் பாஜாகாவின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை எடுத்துரைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.அண்ணாமலை செல்லும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டதால் மக்களின் அன்பும் ஆதரவும் அண்ணாமலையின் பாதை யாத்திரைக்கு மிகப்பெரும் வெற்றியை தந்தது.

இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் முதல் கட்ட பாதயாத்திரை மாபெரும் வெற்றியை பாஜாக அரசுக்கு அளித்துள்ளது இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பாதை யாத்திரைக்கு அண்ணாமலை தயாராகி வருகிறார். மேலும் இந்த பாதை யாத்திரையில் அண்ணாமலை நடை பயணம் செல்லும் ஊர்கள் மற்றும் தேதிகள் பட்டியல் என் மண் என் மக்கள் யாத்திரை ஒருங்கிணைப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார்... அண்ணாமலையின் இரண்டாம் கட்ட நடை பயணம் அரசியலில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது..

எனவே இரண்டாம் கட்ட நடை பயணத்தில் என்னென்ன வைத்துள்ளாரோ என்று எதிர் கட்சிகள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர் இது மட்டுமல்லாமல் அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணத்தில் மக்களின் வரவேற்பை போஸ்டர் பேனர்கள் மூலம் தெரிந்து கொண்டு களம் மாறிவிட்டது என்று திமுகவினர் புலம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்ற போது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது சந்திராயன் 3 வெற்றி கரமாக நிலவில் தரையிறங்கியதை தொடர்ந்து லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது இது மட்டுமல்லாமல் பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது ரக்க்ஷா பந்தன் அன்று அன்பு சகோதர சகோதரிகளுக்கு 200 ரூபாய் சிலிண்டர் விலையை குறைத்துகூடுதல் மகிழ்ச்சி அளித்துள்ளார் இதனை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று செய்திகளும் பேசப்பட்டு வருகிறது.

தமிழக பாஜக தலைவர் தனது இரண்டாவது நடை பயணத்தை செப்டம்பர் 4ம் தேதியில் இருந்து தொடங்கவிருக்கும் நிலையில் திராவிட மாடல் என்று கூறப்படும் ஆளும் கட்சி பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டு பாரத பிரதமர் மோடியோடு ஒன்றிணைந்து உழைக்கும் என் மண் என் மக்கள் நடை பயணத்தின் முன்னோடியாக விளங்கும், அண்ணாமலை நடை பயணம் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும் எழுச்சியும் ஏற்படுத்தி உள்ளது இதோடு மட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இளைஞர்களுக்கும் மக்களுக்கும் உண்மையுள்ள தலைவராக இருக்கிறார் என்றும் மக்கள் அவரை புகழ்ந்து பேசுகிறார்கள் எனவே இந்த இரண்டாம் கட்ட நடைபெறும் மேலும் சிறப்பாக அமையும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் இரண்டாம் கட்ட யாத்திரை செப்டம்பர் 4ம் தேதி அன்று கொங்கு மண்டலத்தில் துவங்க இருப்பதால் முதல் கட்ட யாத்திரையை விட இரண்டாம் கட்ட யாத்திரையில் அந்தந்த தொகுதியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிகளால் மக்கள் எந்த அளவு பாதிப்படைந்து உள்ளனர் என்பதை பட்டியலிட்டு எடுத்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மேலும் இந்த பாதை யாத்திரையின் முடிவில் அமைச்சரவை கூட மாற்றப்படலாம் அந்தளவிற்கு இந்த யாத்திரை வீறு கொண்டு நடைபெறும் என பாஜகவினர் கூறுகின்றனர்...

Similar News