திட்டம் போட்டு திமுகவை சிக்க வைத்த திருமாவளவன் - புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது...!

Update: 2023-09-12 15:21 GMT

திமுகவை இழுத்து நடுத்தெருவில் நிக்க வைத்த திருமாவளவன்...! புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது...!

திமுகவின் முக்கிய அமைச்சரும், முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்த்து பேசியது தான் தற்பொழுது இணையங்களில் வைரல் ஆகிறது. குறிப்பாக I.N.D.I.A கூட்டணியில் இருக்கக்கூடிய திமுகவின் கூட்டணி கட்சிகளே இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு திமுக வெறுப்பை சம்பாதித்து விட்டது.

அகில இந்திய அளவில் இப்படி திமுக சனாதன தர்மத்தை கையில் எடுத்து பேசி சர்ச்சை ஆவது தற்பொழுது திமுகவிற்கு அரசியல் ரீதியாக பின்னடைவாக பார்க்கப்படுகிறது என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் திமுக, ஆனால் தற்பொழுது சனாதன எதிர்ப்பு என இந்து மதத்தை எதிர்ப்பது அதன் போக்கில் இருந்து மாறி செல்கிறது என விமர்சனத்தை முன்வைத்து வந்தனர் மூத்த அரசியல் பார்வையளர்கள்.

இந்த நிலையில் சனாதன எதிர்ப்பு என்னுடைய பல ஆண்டு கனவுஇன்று திமுக கூட்டணி கையில் எடுத்திருப்பது எனக்கு பெருமையை தருகிறது என்கின்ற ரீதியில் திருமாவளவன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் விதமாக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் திருமாவளவன் அப்பொழுது அவர் பேசியது... விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சனாதன தர்மத்தை எதிர்த்து வருகிறது இப்பொழுது திமுக அதனை கையில் எடுத்துள்ளது எங்களுக்கு பெருமை என கூறினார். 

இப்படி சனாதன எதிர்ப்பு என்ற கருத்தியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி பல ஆண்டுகளாக செய்து வருகிறது, இன்றைக்கு அதனை திமுக செய்துள்ளது என ஒன்றே குலம் ஒருவனே தேவன் என ஆரம்பிக்கப்பட்ட திமுகவை இந்த சனாதன எதிர்ப்பு என இந்து மத எதிர்ப்பிற்கு கொண்டு வந்து நிறுத்தியதை பெருமையாக திருமாவளவன் பேசிய வீடியோ இணையங்களில் வைரல் ஆகிறது.

இதற்கு இன்னமும் திமுக தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News