"அரவக்குறிச்சியை மாற்றி காட்டுவேன்" சபதமெடுக்கும் அண்ணாமலை - அமோக வரவேற்பை பெறும் அண்ணாமலை பிரச்சாரம்!

Update: 2021-03-16 01:15 GMT

அண்ணாமலை ஐ.பி.எஸ் இந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் அதிகம் எதிர்பாக்கப்படும் ஓர் முக்கிய வேட்பாளர், தமிழக பா.ஜ.க'வின் நம்பிக்கை நட்சத்திரம். இவரது பரப்புரைகளில் வெறுமனே வாக்குறுதிகள் மட்டுமின்றி மக்களின் நீண்டகால பிரச்சினைகள் கருத்தில் கொள்ளப்பட்டு அதற்கு தீர்வுகளை கைவசம் வைத்து பரப்புரையில் ஈடுபடுவது வாக்காளர் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் மக்கள் மத்தியில் அண்ணாமலை மீது ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சியின் தமிழக பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அண்ணாமலை அவர்களின் வாக்குறுதிகளின் சில முக்கியமானவை,

# 2026 க்குள் அரவக்குறிச்சி தொகுதிக்குள் நான்கு பெரிய மத்திய தொழில்சாலைகளை கொண்டுவந்து 40000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்.

# காவிரி, நொய்யல், அமராவதி, குடவனாறு என நான்கு ஆறுகள் அரவக்குறிச்சி சுற்றி ஓடினாலும் குடிநீர் பிரச்சினை அதிகமாகவே உள்ளது 2026 க்குள் ஒவ்வொரு வீட்டுற்கும் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவருவேன்

என மக்களின் அன்றாட பிரச்சினைகளை முன்னிருத்தி பிரச்சாரம் செய்வது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Similar News