அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஸ்டாலினால் மதுரையில் கூட கால் வைக்க முடிந்தது! தி.மு.க சீக்ரெட்டை படாரென போட்டுடைத்த எடப்பாடியார்!
தி.மு.க ஆட்சியில் துணை முதல்வராக இருந்தும் கூட, ஸ்டாலினால் மதுரையில் கால் வைக்க முடியவில்லை. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஸ்டாலினே மதுரைக்கு வர முடிந்தது. அப்படி ரவுடிசம் நிறைந்த மதுரை, அ.தி.மு.க ஆட்சியில் தான் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.
திமுகவில் நிதியைத் தவிர்த்து எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி நிதியென்று பெயர் வைத்துக் கொண்டு நாட்டின் சொத்துகளைக் கொள்ளையடிக்கின்றனர்.
இந்தத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தலாக இருக்க வேண்டும். இந்தத் தேர்தலில் திமுகவில் 20 வாரிசுகள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஸ்டாலினே மதுரைக்கு வர முடிந்தது. திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்தும் கூட, அவரால் மதுரையில் கால் வைக்க முடியவில்லை.
அப்படிப்பட்ட ரவுடிகள் அராஜகம் மதுரையில் இருந்தது. தற்போது மதுரையை அதிமுக அமைதிப் பூங்காக வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
2006 முதல் 2011 ஆண்டுவரை நடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் இருண்ட ஆட்சி நடந்தது. அதனால், மக்கள் எந்த ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை முடிவு செய்து வாக்களியுங்கள் என்று முதல்வர் பேசியுள்ளார்.
மதுரையில் திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், பழங்காநத்தம், முனிச்சாலை உள்ளிட்ட இடங்களில் முதல்வர் பேசினார். அவருக்கு மாநகர அதிமுக சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் வழிநெடுக மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.