ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் என்ன உறவுமுறை என கீழ்த்தரமாக விமர்சித்த தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்!

Update: 2021-03-30 09:45 GMT

தி.மு.க'வின் மூன்றாம் தர மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தேர்தல் நேரம் மக்கள் நாம் என்ன பேசுகிறோம் என கவனிப்பார்கள் என்ற அக்கரையும் இல்லை, இங்கிதமும் இல்லை தி.மு.க'வினருக்கு, சுவாரஸ்யமாக பேசுகிறேன் என்ற பெயரில் இழிவாக பேசி தங்கள் எண்ண ஓட்டங்களை தி.மு.க'வினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அ.தி.மு.க'வினரை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் "ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் இருவருக்கும் என்ன உறவுமுறை?" என்ற தரமில்லாத வார்த்தைகளை தி.மு.க'வின் எம்.பி தயாநிதி மாறன் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

கிணத்துக்கடவு தி.மு.க வேட்பாளர் குறிஞ்சி பிரபாகரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க'வின் எம்.பி தயாநிதி மாறன் தி.மு.க'விற்கு வாக்கு சேகரித்தார். அப்பொழுது பேசிய அவர் அ.தி.மு.க'வை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் "அ.தி.மு.க'வினருக்கு ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் இருவருக்கும் என்ன உறவுமுறை?" என்று நக்கர் தோணியில் பேசினார். பிரச்சாரத்தை விறுவிறுப்பாக்க அவர் இதுபோல் பேசியது அங்கிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது. மேலும் சில குறும்புக்கார தி.மு.க உடன்பிறப்புகள் இதனை கைதட்டி ஆராவாரப்படுத்தி உற்சாகமடைந்து தங்கள் குரூர புத்தியை வெளிப்படுத்தினர்.

ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி க பழனிசாமி அவர்களை மூன்றாம் தரமாக விமர்சித்த விவகாரத்தில் தி.மு.க எம்.பி ஆ.ராசா நேற்று பொது மன்னிப்பு கேட்டார். இதன் பின்னனியில் தி.மு.க'வின் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மகளிர் எதிர்ப்பு அதிகமாக இருந்ததே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் இப்படி அநாகரீகமாக தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. தி.மு.க'வின் இந்த கீழ்த்தரமான பிரச்சார பேச்சை கண்டு மக்கள் குறிப்பாக பெண்கள் இவர்களின் பேச்சை கேட்பதே பாவம் என்கிற ரீதியில் பேசி வருகின்றனர்.

Similar News