தி.மு.க வேட்பாளரின் பொய் பிரச்சாரத்தை கண்டு கோபமடைந்து விளம்பரங்களை கிழித்த பொதுமக்கள்!

Update: 2021-04-03 02:15 GMT
இமேஜ் கிரேடிட்ஸ் : பாலிமர் நியூஸ் 

பழனி தொகுதி தி.மு.க வேட்பாளர் செய்த பொய் பிரச்சாரத்தை கண்டு கோபமடைந்த பொதுமக்கள் தி.மு.க விளம்பரங்களை கிழித்து போட்டு இனி ஊருக்குள் வரக்கூடாது என தி.மு.க'வினரை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி தொகுதியில் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார் தி.மு.க காலங்காலமாக உழைத்த பெரியவர்களை ஒதுக்கிவிட்டு இந்த முறை எம்.எல்.ஏ'வாக போட்டியிடுகிறார். இவர் பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது மரியாதை நிமித்தமாக வடகவுஞ்சி அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவி தோழிஆனந்த் மற்றும் அவரது கனவர் இருவரும் பொன்னாடை போர்த்தினர்.

இதனை உடனே ஆர்வக்கோளாறில் ஐ.பி.செந்தில்குமாரின் ஆட்கள் "அ.தி.மு.க'வில் இருந்து தோழிஆனந்த் மற்றும் அவரது கனவர் தி.மு.க'வில் இணைந்து விட்டதாக பதிவிட்டனர். இதனை உடனே கேள்விபட்ட அந்த கிராமத்து மக்கள் "ஸ்டாலின் தான் வாராரு! விடியல் தரப் போராரு" என்ற தி.மு.க போஸ்டர்களை கிழித்து போட்டு நாங்கள் எப்பொழுதும் அ.தி.மு.க'தான் என நிரூபித்தனர்.


கோடிகளில் செலவு செய்து தமிழகமே தங்கள் பக்கள் என தி.மு.க'வினர் விளம்பரப்படுத்த முயற்சிப்பதும் ஆனால் மக்கள் தெளிவாக உள்ளதும் பல இடங்களில் காண முடிகிறது.

Similar News