"எங்க பெரியப்பா இருந்தா நல்லா இருந்துருக்கும்" என மு.க அழகிரியை நினைத்து நீலிக்கண்ணீர் வடித்த உதயநிநி - தோல்வி பயத்தினாலா?

Update: 2021-04-03 11:45 GMT

தேர்தல் நேரம் நெருங்க நெருங்க தி.மு.க தோல்வி பயத்தால் செய்த தவறுகளை நினைத்து உள்ளூர பயம் கொண்டுள்ளது என தெரிகிறது. இந்துக்களை இழிவாகவும், மூன்றாம் தரமாகவும், கேவலமாகவும் பேசி வந்த தி.மு.க தற்பொழுது தேர்தல் பயத்தில் இந்துக்களுக்கு நாங்கள் எதிரியல்ல, நாங்கள் எந்த மத நம்பிக்கைகளையும் பழிக்கவில்லை, எங்களுக்கு அனைத்து மதமும் ஒன்றே என ஸ்டாலின் கூட்டங்களில், தி.மு.க விளம்பர வீடியோக்களில் காலில் விழாத குறையாக உருண்டு கொண்டிருக்கிறார்.

போதாக்குறைக்கு தி.மு.க வேட்பாளர்கள் நெற்றியில் வைத்திருக்கும் குங்குமம், விபூதி வியர்வையில் அழிந்தாலே 'அய்யோ' என பதறி மீண்டும் விபூதி, குங்குமம் இட்டு கொள்கின்றனர்.

அது போல தி.மு.க தேர்தல் இல்லாத காலத்தில் பதவி சண்டைக்காக செய்த மிகப்பெரும் தவறுகளில் முக்கியதானது கருணாநிதியின் மூத்த மகனும், தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலினின் அண்ணனுமாகிய மு.க.அழகிரியை தி.மு.க'வின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து ஒதுக்கியதும் ஒன்றாகும். இந்த தவறை வழக்கம் போல் தேர்தல் வரும் வேளையாகிய தற்பொழுதுதான் தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதி உணர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தி.மு.க'வை பற்றி பேசினார். பின்னர் பெரியப்பாவாகிய மு.க.அழகிரி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறுகையில், "இந்தத் தேர்தலில் களத்துல எங்கள் பெரியப்பா மு.க.அழகிரி இருந்து களப்பணியாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் களப்பணியாற்றியிருந்தால் கண்டிப்பாக நல்லாத்தான் இருந்திருக்கும்" என பவ்யமாக கூறினார்


தேர்தல் இல்லாத சமயங்களில் பெரியப்பா என்ற அடிப்படை மரியாதை கூட இல்லாமல் அவரை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்காமல் சுற்றிவந்த உதயநிதி தற்பொழுது தேர்தல் என்றவுடன் பெரியப்பாவை நினைத்து புலம்புவது மிகுந்த நாடகத்தனமாக உள்ளது என சில தி.மு.க உடன்பிறப்புகளே பேசிக்கொள்கின்றனர்.

Similar News