தி.மு.க. கையில் எடுத்துள்ள பொய் பிரச்சாரங்கள்- இது டிஜிட்டல் இந்தியா மக்களை ஏமாற்ற முடியாது!
தி.மு.க. ஆட்சியின் இருண்ட காலம் பற்றி மக்கள் என்றும் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். அந்த அளவிற்கு 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் மக்கள் தாங்க முடியாத இன்னல்களை சந்தித்து உள்ளனர். அதனாலேயே கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் தி.மு.க.வை மக்கள் அமர வைக்கவில்லை. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று மீண்டும் தங்களது திருட்டுக்களை தொடங்கிவிட வேண்டும் என்று பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். அதில் அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் பொய்.
தி.மு.க.வின் இந்த பொய் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஸ்டாலின் பேசுவது போல் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த தேர்தல் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்குமான தேர்தல் இல்லை. தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையே நடக்கும் போட்டி என்று பேசுகிறார். உண்மையில் ஸ்டாலின் பாசிச என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து தான் அவ்வாறு பேசினாரா என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசை எதிர்த்து செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கு என்னவெல்லாம் கொடுமைகள் இழைக்கப்பட்டது என்பதை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். தி இந்து பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதையும் தினகரன் அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதையும் அதில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியானதையும் மறக்க முடியுமா?
'நமது தமிழ் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை வடநாட்டு காரர்களுக்கு தூக்கி கொடுக்கிறார்கள்' என்று தனது வீடியோ விளம்பரத்தில் ஸ்டாலின் தெரிவிப்பார். ஸ்டாலின் கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டில் தான் இருந்தாரா அல்லது ராகுல்காந்தி போல் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டாரா என்று தெரியவில்லை.