தேர்தல் வெற்றி கேள்விக்குறியாகும் போதெல்லாம் தமிழகத்தில் ஜாதி கலவரத்தை தூண்டும் தி.மு.க - நினைத்த மாதிரியே நடக்கும் சம்பவங்கள்!

Update: 2021-04-10 02:09 GMT

திமுகவின் அ.ராசா முதல்வர் பழனிச்சாமி அவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருவதை பலரும் கண்டிருப்பர். இதன் பின்னணியில் திமுகவின் வழக்கமான ஜாதி அரசியல் இருக்கும் என தோன்றுகிறது. இதனை தேர்தலுக்கு முன்பு, மார்ச் 26ஆம் தேதியே அரசியல் விமர்சகர் கோபாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார். 

திமுகவின் வெற்றி சற்றே கேள்விக்குறியாக உள்ள சூழல்களில் ஜாதி,மத வெறிகளை தூண்டி அதனை வாக்குகளாக அறுவடை செய்வது திமுகவின் வழக்கம். இம்முறை திமுகதான் வெல்லும் என மேலோட்டமாக பலரும் பேசினாலும் கூட களநிலவரம் அப்படி அல்ல என்கிறது. பல்வேறு கருத்துக்கணிப்புகளும் அப்படித்தான் கூறுகிறது.

ஆகவே, சிறுபான்மை, நடுநிலையாளர்கள் போன்றவர்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதன் மூலம் மட்டுமே வெற்றி சாத்தியம் எனும் சூழலில் இப்போது அவசரமாக ஒரு ஜாதிக்கலவரம் திமுகவிற்கு தேவைப்படுகிறது. ஆகவே, அ.ராசா எனும் தற்குறியை பேசவைத்து கொங்கு மக்களை சீண்டி அவர்கள் எதிர்வினையாற்றினால் அதனை திட்டமிட்டு கலவரமாக்கி அதனை தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்யலாம் என திமுக திட்டமிடுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் ஒரு ஜாதி சண்டை நடந்தது நினைவிருக்கலாம். ஆனால், கொங்கு மண்டல மக்கள் அவ்வளவு எளிதாக சண்டைகளில் இறங்கமாட்டார்கள் என்பதால் திமுகவின் திட்டம் ஈடேறுவது சற்று சிரமமே. அப்படி எதுவும் நடக்காத சூழலில் அவர்கள் அடுத்து வன்னியர் சமூகத்தை தான் சீண்டுவார்கள். வன்னியர் சமூகம் கொங்குமண்டல சமூகத்தை போல அமைதியாக கடந்து போகாது என்பதால் நிச்சயம் சண்டை நடக்கும்.

அப்படி ஏதாவது நடந்தால் திமுக ஜாதி,மத வெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்தி அதிகாரத்தை கைப்பற்றும் கட்சி என்பது உறுதியான உண்மை என அறியவும்.

அந்த வகையில் தான், ஏற்கனவே இருந்த முன் விரோதம் காரணமாக, மது போதையில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த அடிதடியில் இருவர் உயிரிழந்ததை ஜாதிய போர்வையில் தொடர்புபடுத்தி, திருமாவளவன் போன்றோர் அரசியல் பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News