மீண்டும் மிதக்கும் சென்னை - அனுபவத்திலும் படிப்பினை ஏற்காத தி.மு.க அரசு

Update: 2021-12-31 00:30 GMT

4 மணி நேர மழை மீண்டும் சென்னையை மிதக்க வைத்துள்ளது, பல சாலைகள் போக்குவரத்து நெரிசலால் தடுமாறுகின்றன.

சென்னையில் நண்பகல் வரை மழை பெய்யும் என எந்த அறிகுறியும் இல்லை, ஆனால் மாலை பெய்ய துவங்கிய மலை பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியது. மழை காரணமாக முக்கிய சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் சரிவர இயங்க முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அண்ணாசாலை, ராயப்பேட்டை, மேற்கு மாம்பலம், தி.நகர், வடபழனி மெயின்ரோடு போன்ற இடங்களில் படும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதை போல் மழை பெய்ததால் சென்னை மக்கள் அவதிப்பட்டனர். ஆனால் அதில் படிப்பினை கண்டும் சரிவர நடவடிக்கைகள் ஆளும் தி.மு.க அரசு எடுக்காத காரணத்தினால் ஒரு மாத இடைவெளியில் மீண்டும் மழைக்கு சென்னை பாதிப்படைந்துள்ளது.



மழை வடிநீர் வாய்க்கால்கள் தூர்வாராமலும், நீர் வழிப்பாதைகள் மழையால் பாதிக்கப்பட்டதை சரிவர அரசு சரிசெய்யாத காரணத்தினால் மீண்டும் அவதிக்குள்ளாவதோ மக்கள் மட்டுமே! ஆட்சியாளர்களோ தங்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கும், தங்கள் கட்சி தலைவர் சிலைகளை திறக்கவும் தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். வாக்களித்த மக்களோ ஒவ்வொரு முறையும் தண்ணீரில் மிதக்கின்றனர்.

Similar News