செஸ் பிரின்ட் இடப்பட்ட கரை வேட்டி அணிந்து ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பாரா பிரதமர்?

Update: 2022-07-28 11:52 GMT

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடி, செஸ் பிரின்ட் இடப்பட்ட கரை வேட்டி அணிந்து பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.


44'வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக, இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு,மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.

பிரதமர் வருகையையொட்டி தமிழ்நாடு காவல் துறை, மாநிலத் தலைநகரின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் 22 ஆயிரம் போலீஸ் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டுவிட்டர் சமூக வலைதளத்தில், சென்னை வரும் பிரதமரை டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவுகளை பதிவு செய்து  தங்களது மகிழ்ச்சிகளை காட்டி வருகின்றனர்.

இதனால் இந்திய அளவில் இந்த ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 


இந்நிலையில் தமிழக பா.ஜ.க செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு, அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  "செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட செஸ் பிரின்ட் இடப்பட்ட கரைவேட்டி... ஐந்து வேட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன அதில் மூன்று இங்கே இருக்கிறது மீதி இரண்டு எங்கே? சஸ்பென்ஸ்...." என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த 2 வேட்டிகளுள் ஒன்றை, பிரதமர் அணிந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு தற்போது  எழுந்துள்ளது.

Similar News