பத்தாயிரத்தை தாண்டிய கொரோனோ பாதிப்பு - 200 கோடி டாஸ்மாக்'கில் கல்லா கட்டிய தி.மு.க அரசு
தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு பத்தாயிரத்தை கடந்து எகிறிகொண்டிருக்க மறுபுறம் டாஸ்மாக் விற்பனை 200 கோடியை தாண்டி அமோகமாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது.
தற்பொழுது கொரோனோ மூன்றாம் அலை தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளில் கொரோனோ தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை விட மூன்றாம் அலையான இந்த அலையில் கொரோனோ தொற்று எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. உதாரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையின் போது (2/01/22) 1594 என இருந்த கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை (8/01/22) 10978 ஆக உயர்ந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நேற்றைய தமிழகத்தின் டாஸ்மாக் வியாபாரம் 218 கோடி ரூபாய்க்கு ஆகியுள்ளது.
கொரோனோ ஊரடங்கை தி.மு.க அரசு அறிவித்தாலும் அதில் டாஸ்மாக் கடைக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. கடைகள் வழக்கம்போல் எந்த வித நேர மாற்றமின்றி செயல்படும் ஆனால் பள்ளி, வழிபாட்டு தலங்கள், வியாபார நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படும் என தி.மு.க அரசு அறிவித்துள்ளது. ஒருபுறம் பத்தாயிரத்தை கொரோனோ எண்ணிக்கை தாண்டினாலும் மறுபுறம் டாஸ்மாக்'கில் கல்லா கட்டுவதில் தி.மு.க அரசு குறியாக இருப்பதால் கொரோனோ தொற்றை கட்டுப்படும்தும் எண்ணம் தி.மு.க அரசுக்கு இருக்கின்றனதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.