பிரதமர் 3வது முறை ஆட்சி பொறுப்பை பெற்றதும், கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி - கருப்பு முருகானந்தம் பிரச்சாரம்!

Update: 2024-03-25 07:52 GMT

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் விறுவிறுப்பாக உள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சி தரப்பிலும் பிரச்சாரங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முருகானந்தம் தஞ்சை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாஜகவின் கூட்டணி கட்சியான அமமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கோடநாடு கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்று கூறியுள்ளார். 

அதாவது அதிமுக மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அணிகளையும் ஒன்றிணைத்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டோம் ஆனால், கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரங்களை முன்வைத்து திமுக கூட்டணி அமைக்க விடாமல் தடுத்துவிட்டது! 

கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக அணிகளை ஒருங்கிணைத்து பெரிய கூட்டணி அமைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா முயற்சி எடுத்தார். ஆனால் அப்பொழுதும் பழனிச்சாமி ஒத்துக் கொள்ளவில்லை!.

ஆனால் இந்த முறை பாஜக மாபெரும் வெற்றியை பெற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அவரது தலைமையில் ஆட்சியை பொறுப்பை ஏற்பார், அதற்கு பிறகு கோடநாடு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை பெற்று தருவோம் தமிழக மக்களுக்கு வேண்டிய சிறந்த திட்டங்களையும் கொண்டு வருவோம் என்று உரையாற்றினார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News