அந்த 30 எனக்கு; அடுத்த 30 உனக்கு - ஸ்டாலின் போடும் கணக்கு!

Update: 2022-11-25 06:26 GMT

கடந்த 1980 ஆம் ஆண்டு மதுரையில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. அப்போதைய திமுக தலைவராக இருந்த கருணாநிதி தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி செயலாளர் பதவிக்கு முதன் முதலாக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

திமுகவின் அதிகாரமிக்க பதவியான இளைஞரணி செயலாளர் பதவியை ஸ்டாலின் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக வகித்தார்.

இதையடுத்து திமுக பொருளாளராக ஸ்டாலின் பதவி உயர்வு பெற்ற பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வெள்ளகோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

தனக்கு பொறுப்பு தேவையில்லை. தொண்டனாகவே இருந்து சேவை செய்ய விரும்புகிறேன் என்றார்.

சொல்லி முடித்த சில மாதங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Input From: PuthiyaThalaimurai

Similar News