ஸ்டாலின் அமைச்சரவையில் சோறு போடும் டெல்டா மாவட்டத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை! நட்டாற்றில் விடப்பட்ட 4 மாவட்டங்கள்!

Update: 2021-05-07 01:15 GMT

தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக மு.க.ஸ்டாலினை தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதனையடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக நியமித்தார். மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இந்தநிலையில், அவருடன் இணைந்து அமைச்சராக பதவியேற்கவுள்ளவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. நாகை மாவட்டத்தில் திமுக எம்.எல்.ஏ இல்லை. கூட்டணிக் கட்சியினர் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற திமுகவினரில் ஒருவர், திருவாரூர் தொகுதி பூண்டி கலைவாணன், கும்பகோணம் தொகுதி  அன்பழகன், திருவையாறு தொகுதி துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் அமைச்சராக்கப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பட்டியலில் நீர் வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு, அது சம்பந்தம் இல்லாத ஒருவரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.


Similar News