பஸ்ஸை நிறுத்திவிட்டு வந்து நிதீஷ் குமார்! IND கூட்டணியை பேருந்துடன் ஒப்பிட்டு விமர்சித்த அண்ணாமலை!

Update: 2024-01-29 12:14 GMT

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் நடை பயணம் தற்போது கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற போது அண்ணாமலை மக்கள் மத்தியில், எந்த காலத்திற்கு மோடி அவர்கள் பிரதமராக வரக்கூடாது, IND கூட்டணி தான் வர வேண்டும் என்று கூறுகிறார்கள்! நான் தெரியாம தான் கேட்கிறேன் IND கூட்டணியை தொடங்கியது யார்? IND கூட்டணியை ஆரம்பித்த நிதிஷ்குமார், இதை எப்படி கூறலாம் என்றால் இந்த கூட்டணியை ஆரம்பித்தது நிதீஷ் குமார் அந்த வகையில் ஒரு பஸ்ஸின் டிரைவர் ஆக நிதிஷ்குமார் வருகிறார் அந்த பஸ்ஸில் கருணாநிதி ஐயா அவர்களுடைய மகன், ராஜீவ் காந்தி ஐயா அவர்களின் மகன், போன்ற அனைவரும் ஏறி உட்கார்ந்து விட்டார்கள் நிதிஷ் குமார் பஸ்சை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். 

முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த வாரத்தில் கூறியிருந்தால் வண்டி சூப்பரா போகுது, பஸ் செங்கோட்டை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நிதிஷ்குமார் பஸ்ஸை நிறுத்திவிட்டு பாஜகவில் இணைந்து விட்டார்! இந்த வண்டி சரிப்பட்டு வராதுங்க திரும்பவும் முடியல ஓட்டவும் முடியல நமக்கு IND கூட்டணி வண்டி சரி வராது என அங்கிருந்து வந்து பிஜேபியின் மறுபடியும் இணைந்து பீகாரில் ஆட்சி அமைத்திருக்கிறார். 

அதேபோன்று வங்காளத்தில் மம்தா பானர்ஜி அவர்கள் கூறிவிட்டார் இந்த பஸ்ஸின் ஸ்பேர் பார்ட்ஸ் அனைத்தும் சரியில்லை என்று, இந்த IND கூட்டணியை பேருந்துடன் அழகாக ஒப்பிடலாம் ஒரு பஸ் என்றால் இஞ்சின் போன்ற ஸ்பேர் பார்ட்ஸ்கள் முக்கியமாக இருக்க வேண்டும் ஆனால் அந்த கூட்டணியில் எதுவுமே இல்லாமல் யாருமே இல்லை பேரிச்சம்பழத்திற்கு செல்ல வேண்டிய தகர டப்பாவை வண்டி என்று கூறுகிறார்கள் என்று நடை பயணத்தின் போது பேசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி உள்ளது. 

Source : Polimer News 

Similar News