உலகக்கோப்பையில் அரசியல் வேலையை காட்டிய திமுக.... ஒற்றை வீடியோவால் திமுக ஐடி'விங்கிற்கு அடியை போட்ட SG.சூர்யா...

Update: 2023-11-21 04:45 GMT

மொத்தமாக வெறுப்பை கொட்ட நினைத்த திமுக.... ஜஸ்ட் லைக் ஒரே வீடியோவால் முடித்து விட்ட SG சூர்யா...

இந்தியா ஆஸ்திரேலியா மோதும் உலக கோப்பை இறுதிப் போட்டிகள் நடந்து முடிந்தது, இந்தியா ஜெயித்து விடும் உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்று விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது! சில காரணங்களுக்காக இந்திய வீரர்கள் ஆட்டத்தில் சொதப்ப அது போட்டியின் முடிவில் வெளிப்பட்டது.

முடிவில் இரண்டாவதாக இறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணி அடித்த ரன்களை குறைந்து விக்கெட் வித்தியாசத்திலேயே அடித்து வெற்றி பெற்று உலக கோப்பை தட்டி சென்றது. எப்படியும் இந்தியா தான் நடத்துகிறது, இந்தியா வெற்றி பெற்று வரும் இதுவரை உலக கோப்பையை நடத்தும் நாடுகள் எல்லாம் வெற்றி பெற்று கோப்பையை வென்றதுதான் வரலாறு என எதிர்பார்த்து வந்த நிலையில் கோப்பையை பறிகொடுத்தது 130 கோடி இந்தியர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தது.

இந்த நிலையில் எல்லாவற்றிலும் அரசியல் செய்து பழக்கப்பட்ட திமுக தரப்பு இந்த உலகக்கோப்பை போட்டியிலும் தனது அரசியல் வேலையை காட்ட ஆரம்பித்தது. உலகக்கோப்பை வெற்றி பெற்று இறுதியில் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி தான் நேரில் வந்து வழங்கினார்.

அப்பொழுது ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸிடம் கோப்பையை மோடி வழங்கிவிட்டு உடனே அங்கிருந்து அலட்சியமாக சென்று விட்டதாக ஒரு வீடியோவை கட் செய்து திமுக வின் ஐடி விங் பிரிவில் இருக்கும் மாநில துணை செயலாளர் இசை எக்ஸ் பதிவில் பதிவிட்டிருந்தார்.


இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது, வீடீயோவை பதிவிட்டவுடன் மட்டும் அல்லாமல் வெறுப்புணர்வை காட்டுகிறது பாஜக என பிரதமர் மோடி குறித்தும் குறிப்பிடுவது போன்ற வசனத்தையும் பதிவிட்டிருந்தார்.

அதற்கு முழு வீடியோவையும் பகிர்ந்து SG சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்... SG சூர்யா பகிர்ந்த வீடியோவில் மோடி ஆஸ்திரேலியா கேப்டனிடம் கோப்பையை வழங்கி விட்டு அவருக்கு கை கொடுத்து, அவரை உற்சாகப்படுத்திவிட்டு பின்னர்தான் நகர்ந்து செல்கிறார்.


ஆனால் ஆஸ்திரேலிய கோப்பையை கொடுத்துவிட்டு உடனே மோடி நகர்ந்து செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு திமுக இதிலும் வெறுப்பு அரசியல் செய்கிறது என SG சூர்யா அந்த வீடியோவை தெளிவாக பதிவிட்டு குறிப்பிட்டிருந்தார். உலகக் கோப்பையிலும் அரசியல் செய்த ஸ்கோர் செய்ய நினைத்த திமுக ஐடிவிங்கிற்கு இதன் மூலம் சம்மட்டி அடி என இணையத்தில் கமெண்ட்கள் பறக்கின்றன.

Similar News