கருணாநிதி விட்டுசென்ற கடன் 1 லட்சம் கோடி.. அ.தி.மு.க.வை விமர்சிக்க தி.மு.க.விற்கு உரிமை இல்லை.. அமைச்சர் பேச்சு.!

கருணாநிதி விட்டுசென்ற கடன் 1 லட்சம் கோடி.. அ.தி.மு.க.வை விமர்சிக்க தி.மு.க.விற்கு உரிமை இல்லை.. அமைச்சர் பேச்சு.!

Update: 2021-02-23 19:44 GMT

சென்னை, புரசைவாக்கத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் பேசியதாவது: திமுக ஆட்சியின்போது கொடுத்த டிவி நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன். மேலும், மாநிலத்தின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலை குறைப்பதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும். 

தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு நல்லது செய்து வரும் அரசு அதிமுக. தாலிக்கு தங்கம் திட்டத்தில் சென்னைக்கு மட்டும் ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

திமுக உறுப்பினர்கள் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர். ஆனால் கருணாநிதி முதலமைச்சராக விட்டு போன கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய். அதிமுக அரசை குறைகூறும் தகுதி திமுகவிற்கு இல்லை என்று அமைச்சர் பேசினார்.
 

Similar News