2024ம் ஆண்டு எம்.பி. தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல்! - எடப்பாடி பழனிசாமி அதிரடி!

வருகின்ற 2024ம் ஆண்டு எம்.பி. தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2021-09-23 00:15 GMT

வருகின்ற 2024ம் ஆண்டு எம்.பி. தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் மத்தியில் தேர்தல் வெற்றி குறித்து உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகின்ற 2024ம் ஆண்டு எம்.பி. தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர இருப்பதாக கூறினார். எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் நிலையில், எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் உயர வாய்ப்பு இருக்கிறது. கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசிடம் தெளிவான பதில் இல்லை.

மேலும், நீட் தேர்வு விலக்குக்காக அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தையே திமுகவும் கொண்டு வந்துள்ளது. நாங்கள் கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு சிறப்பான திட்டம் என்பதால் திமுகவும் அதையே பின்பற்ற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News