அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 இடங்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு.!

Update: 2021-02-27 13:11 GMT


அதிமுகவுடம் பாமக கூட்டணி அமைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இதனையடுத்து அக்கட்சி 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுகவுடன் சேர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம் என்று கூறியிருந்தார்.


 



இதனையடுத்து இன்று அதிமுக தலைவர்கள் மற்றும் பாமக தலைவர்கள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 23 இடங்கள் வழங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாமக தேர்தலை சந்திக்கும் என்று இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று பாஜகவுக்கும் இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News