40 ஆயிரம் ஆளே இல்லாத வாக்குகள் - ஈரோடு இடைத்தேர்தலில் அம்பலமான திமுகவின் தில்லாலங்கடி வேலைகள்

Update: 2023-02-15 06:19 GMT

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்த வாக்காளர்கள் 5,000 பேரின் பெயர் நீக்கப்படவில்லை. 4ல் ஒரு பங்கு அதாவது சுமார் 45 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை என்ற பகீர் தகவல் கிடைத்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை திமுகவினர் கடைப்பிடிப்பதில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் தென்னரசு போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் திமுக தரப்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தரப்பிற்கும், திமுக தரப்பிற்கும் ஒத்துவராத காரணத்தினால் இருவரும் இணைந்து களப்பணியே செய்யவில்லை. இந்த நிலையில் மக்கள் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாத காரணத்தினால் வேறு திமுக கூட்டணியின் மேல் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக பின்னடைவுதான் என உணர்ந்த திமுக தரப்பு போலி வாக்காளர்களை நம்பி இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புகாரை எழுப்பி இதுகுறித்து தேர்தல் ஆணையரிடம் அதிமுக முறைகேடு குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


இது குறித்து அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

புகார் கொடுத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம் என்ன கூறினார் என்றால், 'இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. தொகுதியில் உள்ள 238 பூத்களுக்கும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளை தொகுத்து கொடுத்துள்ளோம். மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முறையாக பார்க்கவில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியில் இறந்த வாக்காளர்கள் 5,000 பேரின் பெயர் நீக்கப்படவில்லை. 4ல் ஒரு பங்கு அதாவது சுமார் 45 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை, இதனை பயன்படுத்தி திமுக இடைத்தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட உள்ளது' என தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என திமுகவினர் முயன்று வருவதும், திமுக அமைச்சர் துரைமுருகன் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் எனங்கூறுவதும் குறிப்பிடதக்கது.

Similar News