5-க்கும் மேற்பட்ட திமுக வேட்பாளர்களின் சொத்து விவர கணக்கில் முரண்பாடு - நல்லா வாட்டமா வைத்து செய்யப்போகும் தேர்தல் ஆணையம்!

Update: 2021-04-28 01:15 GMT

திமுக வேட்பாளர்கள் பலருடைய சொத்து மதிப்பு, அந்தந்த ஆண்டுகளில் வருமான வரிக் கணக்கில் காட்டியதை விட பல மடங்கு அதிகமாக இருப்பது தேர்தல் கமிஷன் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

45-க்கும் மேற்பட்ட திமுக வேட்பாளர்களின் சொத்து விவரம் பற்றிய கணக்கு பெரிதும் முரண்பட்டு இருப்பதை வருமான வரி இலாகா அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இவர்களில் பலர் குறைந்தபட்சம் 65 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து கொண்டவர்கள். 

குறிப்பாக, 2001 ஆம் ஆண்டு முதல் திமுகவின் சார்பில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் வேட்பாளர்களின் சொத்துக்கள் பற்பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஆனால் இதே காலகட்டங்களில் இவர்கள் சேர்த்த வருமானம், வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த கணக்குகளுடன் சரிவர பொருந்திப்போகவில்லை என கண்டறியப்பட்டு உள்ளது.

டைத்த சொத்து விவரங்களை வைத்து தற்போது வருமானவரித்துறை மேலும் விரிவாக ஆய்வு நடத்தி வருகிறது. தமிழகத்தை தாண்டி திமுகவினர் பல மாநிலங்களிலும், நாடுகளிலும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு இவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்படலாம். இந்த வழக்குகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கோர்ட்டுகளில் விசாரிக்கப்படும்போது, தீர்ப்பும் விரைவிலேயே வந்துவிடும். எம்எல்ஏ பதவியும் பறி போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News