சினிமாவில் கமல் சீனியராக இருக்கலாம்.. அரசியலில் என்னை காப்பியடிக்கிறார்.. நடிகர் மன்சூர் அலிகான்.!

சினிமாத்துறையில் நடிகர் கமல்ஹாசன் சீனியராக இருக்கலாம். ஆனால் அரசியலில் தன்னை காப்பியடித்து வருகிறார் என்று நடிகரும், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சுயேட்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-03-19 04:40 GMT

சினிமாத்துறையில் நடிகர் கமல்ஹாசன் சீனியராக இருக்கலாம். ஆனால் அரசியலில் தன்னை காப்பியடித்து வருகிறார் என்று நடிகரும், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சுயேட்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசியல் களம் கடந்த முறையை விட இது மாறுபட்டதாக உள்ளது. சினிமாத்துறையினர் பலர் இந்த முறை போட்டியிடுகின்றனர். அதில் நடிகர் கமல், குஷ்பு, மற்றும் சுயேட்சையாக சில ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களும் போட்டியிடுகின்றனர்.


 



அந்த வகையில் கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மன்சூர் அலிகான் பேசியதாவது: தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ததை பெருமையாக பார்க்கிறேன். விவசாயத் தொழில் அதிகமாக உள்ள தொகுதி என்பதால் இங்கு போட்டியிடுகிறேன்.

மேலும், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதால் அங்கு போட்டியிடவில்லை. மேலும், கமல் நடிகராக சீனியராக இருக்கலாம். ஆனால் அரசியலில் தன்னை காப்பியடிக்கிறார் என கூறியுள்ளார்.




 


ஆனால் மன்சூர் அலிகான் வில்லனாகத்தான் அனைத்து படங்களிலும் நடித்திருப்பார். கிராம மக்கள் ஒரு நடிகர் வந்துள்ளார் என்றுதான் பார்ப்பார்களே தவிர அவர்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம். இது போன்ற நடிகர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

Similar News