சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்.. நடிகை கவுதமி.!

பாஜக தேசிய மகளிரணித்தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் நடிகையும் பாஜக பிரமுகருமான கவுதமி சேர்ந்து கோவையில் சங்கல்ப யாத்திரையான இரு சக்கர பேரணியைத் துவக்கி வைத்தனர்.

Update: 2021-03-03 05:12 GMT

பாஜக தேசிய மகளிரணித்தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் நடிகையும் பாஜக பிரமுகருமான கவுதமி சேர்ந்து கோவையில் சங்கல்ப யாத்திரையான இரு சக்கர பேரணியைத் துவக்கி வைத்தனர்.




 


இந்த பேரணியில் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கவுதமி பாஜக வரும் சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும் என்று கூறினார்.




 

மேலும், பாஜக சார்பில் நடிகை கவுதமி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 



அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுவது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. எத்தனை தொகுதிகள் என்பது அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வரவில்லை. விரைவில் இந்த அறிவிப்புகள் வெளிவரும் என பாஜக மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News