அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை.. எச்சரிக்கும் ஜெயக்குமார்.!
சசிகலாவின் காரில் அதிமுக கொடி கட்டி செல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சசிகலாவின் காரில் அதிமுக கொடி கட்டி செல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் சென்றிருந்தார். இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியை விட்டு நீக்கியவர் எப்படி கொடியை பயன்படுத்தலாம் என்று ஏற்கனவே அதிமுக தலைமை அவருக்கு எச்சரிக்கை செய்திருந்தது.
இந்நிலையில், மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்திய சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.