கோவை: அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கபசுரகுடிநீர் வழங்கும்போது ரகளையில் ஈடுபட்ட தி.மு.க.வினர்.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்தது. இதனால் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அதன் பின்னர் இருந்து திமுகவினர் பல்வேறு மாவட்டங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது மற்றும் பல்வேறு வகையிலான இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

Update: 2021-05-29 10:53 GMT

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் ஊரடங்கில் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பொதுமக்களின் நிலைமையை கண்டு அவர்களுக்கான காய்கறிகள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகள் வழங்கி வருகின்றனர். இது போன்றவற்றை வழங்கவிடாமல் திமுகவினர் பெரும்பாலான இடங்களில் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு அதிமுக எம்.எல்.ஏ., ஜெயராம் மற்றும் அதிமுகவினர் பொதுமக்களுக்கு மாஸ்க் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கி வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த திமுகவினர் எதற்காக மாஸ்க், கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர் என்று அதிமுகவினரிடையே வம்பு இழுத்துள்ளனர். இதனால் அங்கு இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மோதல் வெடிக்க ஆரம்பித்ததும் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அப்போது ஜெயராஜ் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ. வந்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் இரண்டு தரப்பையும் சமாதானம் செய்தனர். பொதுமக்களுக்கு வழங்கி வந்த உதவிகளை திமுகவினர் தடுத்து வருவது கோவை மக்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News