அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்.. சபாநாயகர் தனபால் பேச்சு.!

‘‘சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்’’ என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-17 13:04 GMT

''சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்'' என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.


 



இந்நிலையில், அவிநாசியில் பா.ஜ., செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் தனபால் பேசியதாவது: அவிநாசி தொகுதியில் மீண்டும் 2வது முறையாக போட்டியிடுகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் நான் அளித்த வாக்குறுதிபடி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளேன்.

பல்வேறு திட்டங்களை தொகுதியில் செய்துள்ளேன். எனவே நிறைவேற்றாத திட்டம் என்று இந்த தொகுதியில் இல்லை என கூறினார்.

மேலும், வருகின்ற தேர்தலில் அதிமுக, பாஜக, கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News