இறங்கி விளையாடுங்க - கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க'வினரை உற்சாகப்படுத்திய அமித்ஷா

தேர்தல் கூட்டணி மற்றும் தமிழக கள அரசியல் நிலவரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கமலாலயத்தில் பாஜகவினருடன் கலந்து ஆலோசித்தார்.

Update: 2022-11-12 12:59 GMT

தேர்தல் கூட்டணி மற்றும் தமிழக கள அரசியல் நிலவரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கமலாலயத்தில் பாஜகவினருடன் கலந்து ஆலோசித்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டமைப்பு தொடர்பாக இன்று அவர் கமலாலயத்தில் உள்ள மூத்த கட்சியை நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் இந்த சந்திப்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு வேட்பாளர் விபரம் குறித்து அமித்ஷா கலந்து ஆலோசித்தார் என செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பாஜக கமலாலயத்தில் கலந்து ஆலோசனை செய்வதற்கு முன் இந்தியா சிமெண்டின் நிகழ்ச்சியில் அவர் கமலாலயம் வருகை புரிந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.


Source - Dinamani

Similar News