பெண்களை மதிக்கத் தெரியாத தி.மு.க.வினர்: அன்புமணி ராமதாஸ்.!

திமுக சார்பில் வேட்பாளராக நிற்கும் நபர் பல முறை வெற்றி பெற்றுள்ளார். இதுவரை தொகுதிக்கு எந்த ஒரு திட்டத்தையும் அளிக்கவில்லை.

Update: 2021-04-01 07:21 GMT

பெண்களையும் தாய்மையையும் மதிக்க தெரியாத கட்சிதான் திமுக என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டசபை தொகுதி பாமக வேட்பாளர் டாக்டர் ராஜாவை ஆதரித்து சின்னசேலத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.


 



அப்போது அவர் பேசும்போது, பாமக வேட்பாளராக களம் இறங்கும் ராஜா ஒரு மருத்துவர், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு நீங்கள் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் பேசும்போது, திமுக சார்பில் வேட்பாளராக நிற்கும் நபர் பல முறை வெற்றி பெற்றுள்ளார். இதுவரை தொகுதிக்கு எந்த ஒரு திட்டத்தையும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் திமுகவினர் பெண்களுக்கு மதிப்பும் கொடுப்பதில்லை, தாய்மையை கொச்சைப்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News