"அண்ணா மீண்டும் வேண்டும் விஜய் அண்ணாவாக!" - பரபர போஸ்டர்கள் !

Breaking News.

Update: 2021-09-15 15:30 GMT

மதுரையில் மறைந்த அரசியல் தலைவர் அண்ணாதுரை மற்றும் திரைப்பட நடிகர் விஜய் ஆகிய இருவரையும் ஒன்றாக சித்தரித்து ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகர் எப்பொழுதுமே போஸ்டர்களுக்கு பிரபலமானது, திரையுலகமாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி பரபரக்கும் போஸ்டர்கள் அங்கு அதிகம் காணப்படும். அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், 'நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொது நலத்தில் தானே முழுக்க கண்ணாயிருந்தார்... எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா, தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா''என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

விஜய் அவர்களின் அரசியல் பிரவேசம் குறிந்து சர்ச்சைகள் அவ்வபோது கிளம்புவது வாடிக்கையாகிவிட்டது.

Tags:    

Similar News