3 மாதம் கழித்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்தால் பேசலாம் ! - அதிரடி காட்டிய அண்ணாமலை !

Update: 2021-10-25 10:30 GMT

"3 மாசம் கழித்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்தால் பேசுவோம்" என செந்தில் பாலாஜி'க்கு பதிலடி தந்திருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மின்சார கொள்முதலில் கமிஷன் என்று அண்ணாமலை தொடர்ந்து அதிரடியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதற்கு விளக்கமளிக்க தெரியாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி பெரியாரின் வசனங்களையும், 'உப்பு போட்டு சாப்பிடுபவர்' என்ற வார்த்தைகளையும் உபயோக்கித்து கோபமடைந்து கத்தி வருகிறார்.

இந்நிலையில் அண்ணாமலை கூறி இருப்பதாவது, "அமைச்சர் செந்தில் பாலாஜியிடன் மன்னிப்பு கேட்க முடியாது. திருட்டை கண்டுபிடிக்க தான் எக்செல் பேப்பரை பகிர்ந்தேன். ஆதாரங்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு அமைச்சர்களாக வருவோம். 3 மாதங்கள் கழித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருந்தால் மதுவிலக்கு ஆயத்தீர்வை பற்றி பேசுவோம். தொழில் தொடங்க சென்னை வருபவர்களை ஊழல்வாதிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

எங்களை ஒருபோதும் மிரட்ட முடியாது. எங்கள் மீது கையை வைத்தால் பா.ஜ.க என்னவென்று அவர்களுக்கு புரியும்" என்று தெரிவித்துள்ளார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News