மலைவாழ் மக்களின் தோழனாக அவர்தம் வீட்டில் களி சாப்பிட்ட அண்ணாமலை - அதிரும் அரசியல் அரங்கம்

அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதிகள் சோழகர் சமூகத்தைச் சேர்ந்த மலைவாழ் தம்பதி வீட்டில் மதிய உணவாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை களி சாப்பிட்டார்.

Update: 2022-11-17 03:36 GMT

அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதிகள் சோழகர் சமூகத்தைச் சேர்ந்த மலைவாழ் தம்பதி வீட்டில் மதிய உணவாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை களி சாப்பிட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றக் கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பின்பு மலைவாழ் மக்கள் வசிக்கும் பர்கூர் வனப்பகுதிக்கு சென்றார்.

அங்கு மலைவாழ் மக்களில் சோழகர், லிங்காயத்தை, இந்து மலைவாழ் சமூக மக்களை சந்தித்தார். அவர்களது வீட்டில் மதிய உணவாக களி சாப்பிட்டார் இதன் புகைப்படங்கள் சமூகத்தில் வலைத்தளங்களில் வைரலாகி அனைவராலும் பாராட்டி பகிரப்பட்டு வருகிறது.

Source - Dinamalar

Similar News